மரண தண்டனை


தனி மனிதனின் அடிப்படை உரிமை - உயிர் வாழ்வது. அதைப் பறிப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை - அந்தத் தனிமனிதனையும் சேர்த்து. அதனால் தான் தற்கொலை செய்ய முயற்சிப்பது குற்றம். அதனால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதும் குற்றம்.

ஒருவன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். முன்கூட்டியே திட்டமிடுகிறான். நாள் குறிக்கிறான். நேரம் குறிக்கிறான். எப்படிக் கொல்வது என்று திட்டமிடுகிறான். பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி அந்தக் கொலையை அவன் செய்கிறான். நீதிபதி விசாரிக்கிறார். பலரது சாட்சிகளைக் கவனமாகக் கேட்கிறார். ஆழ்ந்து யோசிக்கிறார். ஒரு முடிவுக்கு வருகிறார். கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். நாள் குறிக்கப்படுகிறது. நேரம் குறிக்கப்படுகிறது. எப்படி மரண தண்டனை வழங்குவது என்று முடிவுசெய்யப்படுகிறது. பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்பே திட்டமிட்டபடி கொலையாளி கொலை செய்யப்படுகிறான். இரண்டும் என்ன வித்தியாசம்? இரத்தத்துக்கு இரத்தமா? இது சரியாகுமா?

டிஎன்ஏ (DNA) சோதனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அலெக் ஜெ·ப்ரி (Alec Jeffery). அவர் அறிமுகப்படுத்திய ஆண்டு 1984. அப்பொழுது மிகவும் பிரபலமான பிட்ச் ·போர்க் வழக்கில் தான் முதன் முதலில் DNA fingerprinting பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது பக்லேண்ட்(Buckland). கிட்டத்தட்ட போலீஸ் வழக்கை மூடிவிட்ட நிலையில், அலெக் ஜெ·ப்ரீயின் தொழில்நுட்பம் காலின் பிட்ச்·போர்க் என்பவனை மிகச்சரியாக அடையாளம் காட்டியது. பக்லேண்ட் தப்பித்தான். பிட்ச்·போர்க் மாட்டிக்கொண்டான். குற்றம் மிகச் சரியாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவன் குற்றவாளி. டீஎன்ஏ சோதனை அறிமுகம் ஆனபிறகு எண்ணற்ற அப்பாவிகள் விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1973இல் இருந்து 130 நபர்கள் தூக்குதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவிகள். இவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தால்?

டிவிட்டரில் ஒருவர் டிவிட்டிருந்தார்: "மூவரை தூக்கிலிட்டால் என்ன என்று சாதரணமாய் கேட்கிறார்கள். அந்த மூவருள் ஒருவர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்துச் சொல்லுங்கள்" என்று.  இது ஒரு விசயத்தை நடுநிலையாக ஆராயாமல், உணர்ச்சி வசப்பட்டுப் பார்ப்பது. அதே கேள்வியைத் திருப்பிக்கேட்க முடியும். "அந்த மூவர் கொலை செய்த நபர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்து சொல்லுங்கள்" என்று.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை கண்களை மூடிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு அதரத்ததைப் போல. அன்னா போல மற்றொருவர் இந்த ஆவின்பால் சட்டம் கொண்டுவந்தால் நாட்டில் சர்வாதிகாரப் போக்கு அதிகரிக்கும். யாரையும் எளிதாக லஞ்ச ஒழிப்பு வழக்கில் தண்டிக்க முடியும். அப்பாவிகள் மாட்டிக்கொள்வதற்கு சாத்தியம் ஏராளம். அதனால் நான் இந்த ஆவின்பால் சட்டத்தை எதிர்க்கிறேன் என்று எதிர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - யாரும் செய்யாதது அன்னாவின் வெற்றி. அவர் கிளறிவிட்டு தூபம் போட்டதற்கு கிடைத்த வெற்றி - அப்பொழுது நீங்கள் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? கவனிக்க அன்னாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர், லஞ்சத்தை ஒழிக்கக்கூடாது என்று உண்ணாவிரதம் இருக்கவில்லை. லஞ்சத்தை ஒழிப்பதற்கு சொல்லப்படுகின்ற தீர்வைத்தான் எதிர்க்கிறார்!

உண்ணாவிரதம் இருப்பது ஒரு மிக மோசமான முன்னுதாரணமாக ஆகிவருகிறது. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். மரண தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது ஒரு வகையான ப்ளாக் மெயில். மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்று மற்றொரு கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தால் என்ன செய்வது? அரசு யாருடைய கோரிக்கையை நிறைவேற்றும்?

அதே சமயத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குதண்டனை சுப்ரீம் கோர்ட் விதித்த பொழுது மக்கள் அதைக் கொண்டாடத்தான் செய்தனர். கோயம்பத்தூர் குழந்தைகளின் இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டதும் இதே மக்கள் தான் ஆர்ப்பரித்தனர். மேலும் 2008 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கசாப்புக்கு தூக்குத்தண்டனை கொடுக்கவேண்டும் என்று வாதிட்டவர் பலர்.

நாளுக்கு ஒன்றும் நேரத்துக்கு இரண்டும் பேசித்திரிவது நமக்கு பழக்கமாகிவிட்டது.

யாராக இருந்தாலும் தூக்குத்தண்டனை என்பது கூடாது. ஒருவரது உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பது என்பது நாகரீகமான ஒரு சமூகம் செய்யத்தகுந்ததா. இதற்கும் நரபலிக்கும் என்ன வித்தியாசம்?

ஐரோப்பா யூனியன் பிற நாடுகள் தங்கள் குழுமத்தில் இணைய தகுதியாக மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்கிற விதியை வைத்துள்ளது. நமக்குத்தான் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை மேற்கோள் காட்டாமல் இருக்கமுடியாதே! எதற்கெடுத்தாலும் மனித உரிமையைக் காரணம் காட்டி சீனாவையும், க்யூபாவையும் வம்புக்கிழுக்கும் அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விசயம். (அங்கும் கூட சில மாகானங்களில் மரணதண்டனையை ஒழித்துவிட்டனர்.)

தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள் எதிர்க்கிறோம் என்கிற கோஷம் உணர்ச்சியைத் தூண்டிவிட வழிவகுக்கும் ஆனால் இந்திய அளவில் பெரிய ஆதரவைப் பெற்றுத்தராது.

மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது. எனவே அதனை எதிர்க்கிறேன்.

மரண தண்டனைக்கு இன்னும் மிகச் சொற்ப நாட்களே இருக்கின்றன.

the cove


டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் வைத்திருக்கூடும். பிறகு எதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டும்? டால்·பின்களையும் கஷ்டப்படுத்த வேண்டும்?



இவ்வாறான டால்·பின் ஷோக்களுக்கு தேவைப்படும் டால்·பின்களை சப்ளை செய்வதில் முதலிடத்தில் இருப்பது ஜப்பான். அதிலும் பாட்டில் மூக்கு டால்·பின்களுக்கு கிராக்கி அதிகம். இவ்வாறான டால்·பின்களை எளிதாக பழக்கப்படுத்தலாமாம். டால்·பின்களை பழக்கப்படுத்தத் தொடங்கிவைத்த புண்ணியவான் - ரிக் பேரி(Richard O’Barry). மியாமி கடல் கண்காட்சியகத்துக்காக இவர் முதலில் ஐந்து டால்·பின்களைப் பிடித்தார். பிறகு இவை ப்ளிப்பர் (Flipper) என்கிற அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் மூலமாக மிகப் பிரபலம் அடைந்தன. இந்த அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் கேதி என்கிற பெயரில் ஒரு டால்·பின் நடித்துவந்தது. இந்த கேதியை பிடித்து, சிறுவயதிலிருந்து பழக்கப்படுத்தியது பேரி.



டால்பின்கள் நம்மைப் போல இயல்பாக மூச்சு விடுவதில்லை. அதாவது நாம் நாமாகவே மூச்சை நிறுத்தி தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. ஏனென்றால் நமக்கு மூச்சு விடுவதென்பது இயல்பு - தன்னிச்சையாக நடப்பது. ஆனால் டால்·பின்களுக்கு அப்படியில்லை. ஒவ்வொரு மூச்சையும் அவை பிரயத்தனப்பட்டேதான் விடவேண்டும். மூச்சை நிறுத்தி தற்கொலை செய்யவேண்டும் என்று அவை விரும்பினால் அவைகளால் அதைச் செய்ய முடியும்.

ஒரு நாள் கேதி, கண்காட்சியில் பேரியைப் பார்த்தவுடன், பேரியை நோக்கி வேகவேகமாக நீந்தி வந்தது. பேரியின் கைகளில் தஞ்சப்புகுந்தது. பிறகு பேரியை உற்று நோக்கியது. பிறகு முதல் மூச்சை இழுத்துவிட்டது. பிறகு இரண்டாம் மூச்சை விடவில்லை. தற்கொலை செய்துகொண்டது. பேரியின் கரங்களிலே தற்கொலை செய்துகொண்டது.


(Richard 0'Barry and Cathy)

டால்·பின் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்படும்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு முதலில் தன்னிலை அறிந்திருக்கவேண்டும். அதாவது நாம் கண்ணாடியைப் பார்த்தால் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்பது நமக்குத் தெரியும். அது யார் என்பதும் நமக்குத் தெரியும். அதே போல டால்·பின்களுக்கும் தெரியும். அவைகளுக்கு தன்னிலை தெரியும். தற்கொலை செய்யும் அளவுக்கு டால்பின்களுக்கு என்ன துன்பம்? என்ன மீளாத் துயரம்?

டாள்·பின்கள் தங்கள் இரையை எக்கோ (கிட்டத்தட்ட நம்முடைய சோனார் போல) முறையைப் பயன்படுத்தித் தேடுகின்றன. அவைகளுக்கு ஒலி இயல்பானது. ஒரு டால்·பினை பிடித்து வந்து பல்லாயிரக்கான ஹிஸ்டீரிக் மக்களிடையே நாட்டியமாடச்சொல்லும் பொழுது அவைகளுக்கு கிறுக்கு பிடிப்பது போல இருக்குமாம். டால்·பின்கள் தாவிக்குதித்தவுடன் அங்கே அமர்ந்திருக்கும் பல்லாயிரக்கான மக்களும் ஒரு சேர கத்திக்கூப்பாடு போடும் பொழுது அவை என்ன செய்யும்? மிரளும். மனச்சோர்வு அடையும்.

இந்த உத்தியைக் கையாண்டு தான் ஜப்பானியர்கள் வருடம் ஒன்றுக்கு 23000 டால்·பின்களை வேட்டையாடுகின்றனர். இந்த வேட்டையாடும் விளையாட்டு ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் துடங்கும்.

என்ன உத்தி? டால்·பின்கள் வருடந்தோரும் புலம்பெயரும் பொழுது ஜப்பானின் தாய்ச்சி (Taiji) வழியைத் தான் பயன்படுத்தும். வருடந்தோரும் ஆயிரக்கணக்கான டால்·பின்கள் அவ்வழி வரும் பொழுது - ஜப்பானியர்கள் பெரிய பெரிய இரும்புக்கம்பிகளை தண்ணீருக்குள் செலுத்தி, அதன் முனையில் சுத்தியலால் அடித்து பெருத்த சத்தத்தை எழுப்புகின்றனர். இது ஒரு ஒலித் திரையை உருவாக்கும். சத்தத்தைக் கண்டு மிரளும் டால்·பின்கள் வேறு வழி திரும்பும். அந்த வழி தாய்ச்சி மீனவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் கிடங்கில் கொண்டு போய் விடும். டால்·பின்கள் உள்ளே வந்தவுடன் அனைத்து வழிகளும் அடைக்கப்படும். டால்·பின்கள் தப்பிக்க இயலாது.

பிறகு டால்·பின் ட்ரெயினர்கள் (பழக்கப்படுத்துவோர்) வந்து அடைப்பட்டுக்கிடக்கும் டால்·பின்களை அலசி ஆராய்ந்து பாட்டில் மூக்கு கொண்ட டால்·பின்களை தேடிப்பிடித்து எடுத்து சென்று விடுவர். இப்படி விற்கப்படும் ஒவ்வொரு டால்·பினும் மில்லியன் யென்னுக்கு விலை போகும்.

இப்படி சந்தையில் செல்லாத டால்·பின்களை இறைச்சிக்காக கொன்றுவிடுகிறார்கள். அப்படியென்ன டால்·பின் இறைச்சி நல்லதா? டால்·பின்களின் இறைச்சியில் பாதரச (மெர்க்குரி) நச்சு அதிகமாக கலந்திருக்கிறதாம். இது மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது. மேலும் ஜப்பானியர்களிடம் நீங்கள் டால்·பின் இறைச்சி உண்பீர்களா என்கிற சர்வேயில், அவர்கள் டால்பின் இறைச்சியை உண்பதில்லை (டால்·பின் இறைச்சியையுமா சாப்பிடமுடியும்?) என்று தெரியவந்துள்ளது. பிறகு எதற்காக டால்பின்கள் ஆண்டுதோறும் கொன்று  குவிக்கப்படுகின்றன?




டால்·பின் இறைச்சியை சந்தையில் திமிங்கல இறைச்சி என்று விற்றுவிடுகிறார்கள்.

அதென்ன பாதரச நச்சு? ஜப்பானுக்கு இந்த பாதரச நச்சு ஏற்கனவே அறிமுகம். இது ஒரு நோயாகவே இருந்திருக்கிறது. அது மினமாட்டா நோய் (Minamata disease). இந்த நரம்பு சார்ந்த நோய் அதிகமான பாதரச நச்சினால் ஏற்படுகிறது. இந்த நோய் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? கைகளில் உணர்ச்சி இருக்காது. காது சரியாகக் கேட்காது. நாக்கிற்கு சுவை தெரியாது. கண் சரியாகத் தெரியாது. கால்களால் நடக்க இயலாது. இந்த நோய் வலுவாகத் தாக்கினால் பக்கவாதமும், உடனடியாக இறப்பும் ஏற்படும். மேலும் இந்த நோய் கற்பினிப்பெண்களை கடுமையாகத் தாக்கி வயிற்றில் இருக்கும் கருவையும் தாக்கும். இவ்வாறான நோய் தாக்கப்பட்ட பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் இருக்கும்.

இந்த மினமாட்டா நோய் 1956இல் குமமோட்டோ ப்ரீபெக்ச்சரில் இருக்கும் மினமாட்டா நகரத்தில் முதலில் பரவியது. நச்சுத் தன்மை கொண்ட மெத்தில்மெர்க்குரியை (MethylMercury) தன் கழிவு நீரின் மூலம் 1932இல் இருந்து 1968 வரை சிஸ்ஸோ கார்ப்பரேஷன் (chisso corporation) வெளியேற்றிக் கொண்டிருந்திருக்கிறது. இந்த அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட ரசாயனக்கழிவு மினமாட்டாவின் கடல் சுற்றுப்புறத்தில் படிந்து கடலில் வாழும் மீன்களுக்குள் சென்றுவிட்டன. அந்தப் பகுதி மக்கள் நச்சுத்தன்மை கொண்ட ரசாயானம் நிறைந்த அந்த மீன்களைச் சாப்பிட்டதால் மக்களையும் மெர்க்குரி பாதித்தது. அதன் விளைவே மினமாட்டா நோய். முப்பது வருடங்களாக, பூனை, நாய், பன்றி மற்றும் மனிதர்களின் சாவைப் பார்த்தும் ஜப்பான் அரசும் சிஸ்சோ நிறுவனமும் இந்த ரசாயனச் சுற்றுபுறக்கேட்டை கண்டுகொள்ளாமல் விட்டது தான் மிகுந்த மனவருத்தம் கொடுக்கும் செயல்.


(மினமாட்டா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய கை)

ஏற்கனவே மெர்க்குரி நச்சினால் பாதிக்கப்பட்ட டால்·பின்களை சாப்பிடக்கூடாது என்று WHO பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயத்தில் தாய்ச்சி (Taiji) டால்·பின் இறைச்சியை பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவாகப் பரிந்துரை செய்திருக்கிறது. அந்தப் பகுதி மீனவர்களும் டால்·பின் இறைச்சியை சாப்பிடுகின்றனர். மேலே சொன்னது போல, சந்தைக்கும் டால்·பின் இறைச்சியை திமிங்கல இறைச்சி என்று பெயரிட்டு விற்றுவிடுகின்றனர்.

தான் வளர்த்த டால்·பின் தன் கையிலே இறந்துபோனதை பொறுக்கமாட்டாமல் பேரி அன்றிலிருந்து டால்·பின்களை விடுதலை செய்ய ஆரம்பித்தார். நிறைய இடங்களில் சென்று வலைகளை அறுத்தெரிந்திருக்கிறார். அதற்காக சிறையும் சென்றிருக்கிறார். தான் ஆரம்பித்து வைத்த விளையாட்டு இன்று மல்டி மில்லியன் டாலர் தொழிலாக மாறிப்போனதைக் கண்டு மனம் வறுந்தினார். இந்த மல்டி மில்லியன் டாலர் பிஸினசுக்காக ஆண்டு தோறும் 23,000 டால்·பின்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த நினைத்தார்.

ஆனால் இதை தடுத்துநிறுத்துவது எளிதல்ல. ஏன்? ஆதாரம் வேண்டுமே! இந்த டால்·பின் கொலைகள் ஜப்பான் அரசின் ஆசியோடு நடக்கும் ஒரு பாதகம். எனவே டால்·பின் வேட்டை சீசனில் அங்கே நுழைவது கஷ்டம். மேலும் அங்கிருக்கும் லோக்கல் மீனவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதாவது டால்·பின்கள் கொலை செய்யப்படும் இடத்தை நீங்கள் நெறுங்கி போட்டா எடுப்பது என்பது முடியாது. மீனவர்களே சொல்லுகிறார்கள்: இங்கே நடப்பது வெளி உலகத்துக்குத் தெரிந்தால் எங்களால் தொடர்ந்து இதைச் செய்ய முடியாது. ஏற்கனவே திமிங்கலங்களை ஜப்பான் கொன்று குவிப்பதைப் பார்த்து திமிங்கல வேட்டைக்குத் உலக நாடுகள் தடைவிதித்துவிட்டன. இப்பொழுது டால்·பின்களையும் விட்டுவைக்கவில்லை என்கிற செய்தி உலகத்துக்குத் தெரிந்தால் என்ன ஆவது?

Dolphin Slaughter Taiji Japan The Cove Movie Brooke McDonald | Adventure Journal

எனவே பேரிக்கு ஆதாரம் திரட்டுவது மிகப்பெரிய வேலை. மிகவும் கடினமான வேலை. அவர் வெளியே காரில் சென்றாலே, பின்னாலே வேவு பார்ப்பவர்கள் வருகிறார்கள். போலீசும் வருகிறது. ஒரு முறை நகரத்தின் தலைமை காவல்துறை அதிகாரியே பேரியை வேவு பார்த்திருக்கிறார் என்றால் இந்தக் கொடூரம் யார் யாரின் துணையோடு நடக்கிறது என்று பார்த்தீர்களா?

பேரி ஆதாரம் திரட்டியே தீர்வது என்ற தீர்மானத்தோடு படை திரட்டுகிறார். குழு தயார் செய்கிறார். குழுவிற்கு ஓசன்ஸ்-11 (oceans-11) என்று பெயரிடப்படுகிறது. தன்னார்வலர்களை துறை வரிசையாக தேர்ந்தெடுக்கிறார். எக்ஸ்-மிலிட்டரி நபர், கேமரா பொறுத்துபவர், நீரில் டைவ் அடிப்பவர் என்று துறைக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக திட்டம் போடுகிறார். நள்ளிரவில் யாவருக்கும் தெரியாமல் கேமராவை தண்ணீருக்கு அடியிலும் மறைவாகவும் பொருத்துகிறார்கள்.

கொஞ்சநாட்களில் தேவையான வீடியோ காட்சி கிடைக்கிறது.

டால்·பின்களை கூர்மையான ஈட்டியைப் போன்ற ஒன்றைக்கொண்டு குத்திக்கிழிக்கிறார்கள். டால்·பின் கதறுகிறது. தண்ணீருக்கடியில் அவர்கள் பொருத்திய ஒலி பதிவும் செய்யும் காமெராவில் டால்·பின்களின் கூக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. ஒரு டால்·பின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கரையை நோக்கி வருகிறது. அதன் ஒரு புறம் குத்திக்கிழிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் வழிந்தோடுகிறது. தண்ணீருக்குள்ளிருந்து தாவி வருகிறது. எந்தத் தாவலை நாம் டால்·பின் காட்சியங்களில் பார்த்து ரசித்தோமோ அதே போன்றதொரு தாவல். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாவல் அடங்குகிறது. கடைசி முறையாக ஒரு முறை வெளியே வந்து தலை காட்டுகிறது. பிறகு அவ்வளவு தான். அந்த டால்·பின்னைக் காணோம். கிடந்த டால்·பின் குவியலில் அது கலந்திருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ஆற்றில் அதன் ரத்தமும் கலந்திருக்கும்.

அந்தப் பகுதியே கடும் ரத்தச்சிவப்பாகக் காட்சி தருகிறது. அடுத்த டால்·பின் வேட்டைக்கு மீனவர்கள் தயாராகிறார்கள்.

இது தான் The Cove என்கிற டாக்குமெண்டரிப் படம்.

இதைத் தடுத்து நிறுத்த இங்கே செல்லுங்கள்: http://www.takepart.com/cove

மேலும் படிக்க:

  1.  http://en.wikipedia.org/wiki/Ric_O'Barry
  2. http://en.wikipedia.org/wiki/Bottlenose_dolphin
  3. http://en.wikipedia.org/wiki/The_Cove_(film)
  4. http://en.wikipedia.org/wiki/Minamata_disease
  5. http://en.wikipedia.org/wiki/Taiji

Richard O'Barry's Facebook page:
http://www.facebook.com/pages/Richard-OBarry/241314570366

மட்டன் சமோசாவும் ஆன்மாவும்



http://religion.blogs.cnn.com/2011/07/21/hindu-diners-sue-indian-restaurant-for-selling-meat-samosas/?hpt=hp_c2

“The Hindu customers said the restaurant served them meat samosas, harming them emotionally and spirituality. A state appellate court ruled Wednesday that they can sue for the cost of travel to India to purify their souls.”


கேள்வி 1: ஆன்மா என்கிற வஸ்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பளிக்குமா?
கேள்வி 2: மட்டன் சாப்பிட்டதால் அழுக்காகிவிட்ட அந்த ஆன்மா, இந்தியா சென்றால் தூய்மையாகுமா என்பதையும் விசாரிக்குமா  நீதிமன்றம்?
கேள்வி 3: மட்டன் சமோசா சாப்பிட்டதால் எத்தனை சதவிகிதம் ஆன்மா அழுக்காகியிருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்ல முடியுமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

(via India-Uncut)

ஓவியர் பாரதிராஜா - கதைசொல்லி சிவக்குமார் - அட்லாண்டிஸ் வீடியோ




நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் "இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்" என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் பாரதிராஜா மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.

அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.

பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.

(படம்: விகடன்)
*

நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ  ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!

அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா - என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.

என்னை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு அட்வைஸ் (பெண்களுக்கு):
படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தவுடன் கூட வேலை பார்பவனையே (நல்லவனா என்று பார்த்து!) கல்யாணம் செய்துக்கனுமாம். இல்லீன்னா யாரோடவாவது அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்களாம்!

எப்பூடி!

இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.

அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.

*

ஜுலை 17 அன்று அமெச்சூர் வானாராய்ச்சியாளர் ஸ்காட், அட்லான்டிஸ் ஸ்பேஸ் ஷட்டிள், இன்டர்னேஷனல் ஸ்பேஸ் (ISS) ஸ்டேஷனில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஐஎஸ்எஸின் மேலே தெரிகிற வெள்ளையான பொருள் தான் அட்லாண்டிஸ். சோலார் பேனல்களையும் நீங்கள் பார்க்கமுடியும்.

*

மும்பை குண்டுவெடிப்பு


குண்டுவெடிப்பு நடந்து சில நிமிடங்களிலே எனக்கு தெரிந்துவிட்டது. iPhoneக்கும் NDTV appக்கும் நன்றி. தெரிந்தவுடன் என் மனதில் தோன்றியது ஒரு கெட்டவார்த்தை. உறக்கவே சொல்லிவிட்டேன். என் மனைவி சொன்னார்: அவன அப்படி திட்றதனால என்ன நடக்கப்போகுது?
ஒரு மும்பை ப்ளாக்கர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்:
Bombs are something we have to live with now. Obviously, like other nasty things we have to live with, such as murder and robbery, it's important to minimise the number of incidents. We haven't had any attacks for two years and a half, which I think is good going. I'll happily take one attack every two years that kills about twenty of us, and accept the risk of being one of those twenty next time round.

இது மிகவும் வேதனையான விசயம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்றதொரு குண்டுவெடிப்பை ஏற்றுக்கொள்வதாகவும்; அப்படி குண்டுவெடிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரும் பொழுது உயிரிழக்கும் அந்த இருபது பேரில் ஒருவராக இருக்கக்கூடும் ஆபத்தை சந்திக்கத் தயாராக இருப்பதாக சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்? வேறு வழி? கொலைகள் நடக்கிறது. கொள்ளை நடக்கிறது. கொலையும் கொள்ளையும் நடக்காமலே இருந்தால் நல்லது தான். ஆனால் முடியுமா? அவ்வளது பாதுகாப்பை வழங்க முடியுமா? இவ்வளவு சிறிய சிங்கப்பூரிலே கொலைகள் நடப்பதைத் தடுக்கமுடியவில்லை.

எப்படி இவற்றுடன் வாழப்பழகிக்கொண்டோமோ அப்படி குண்டுவெடிப்புகளுடனும் வாழப்பழகிக்கொள்வோம். அவர் குண்டுவெடிப்பு நடந்த இட்த்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் தான் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படி இருந்திருக்கக் கூடும். அப்படி இருந்திருந்தால், இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். குண்டு வெடிக்காத இடத்தில் இருக்க ஆசையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன? ஆனானப்பட்ட அமெரிக்காவிலே – CIA, FBI, ABC என சகட்டுமேனிக்கு உலகமெங்கும் உளவுத்துறை வைத்திருக்கும் அமெரிக்காவிலே – டிவின் டவரை இடித்து தரைமட்டமாக்கினார்கள். எங்கு ஓடுவது?

அமெரிக்காவில் சமீபத்தில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது பற்றிய செய்தியொன்றை அப்பொழுது பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது தீவிரவாதிகள் உருவாக்கிய புதிய வேலைவாய்ப்புகள். அப்பொழுது இரண்டு புதிய வேலைகள் என் கண்ணில் பட்டன. Terror Expert மற்றும் Terrorism Analyst. இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். 


படிக்க: தீவிரவாதிகள் உருவாக்கிய முற்றிலும் புதிய வேலைவாய்ப்புகள்.

நான் மேலே குறிப்பிட்ட மும்பைப் பதிவர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது: ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருபதாயிரம்!

இன்னும் ஒருவரும் பிடிபடாத நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பொதுஜனம் கொடுத்த டிப் ஒன்றை கண்டுகொள்ளாமல் விட்டதற்காக ஒரு காண்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



மேகத்தில்...


இன்று இந்த அருமையான வீடியோ காணக்கிடைத்தது..

மேகங்கள் கொந்தளிக்கும் கடல் போல இருக்கிறது..
Danial Lopez என்பவர் Canary Island இல் எடுத்த வீடியோ..
நம் கிரகம் எவ்வளவு அழகானது பார்த்தீர்களா?

**
ராக் மியுசிக்கும் வானவியல் ஆராய்ச்சியும் இணைந்தால் என்ன கிடைக்கும்?
இது போன்றதொரு (மற்றொரு) அருமையான வீடியோ கிடைக்கும்..



Cassini அனுப்பிய புகைப்படங்களுக்கு Nine Inch Nails இன் ராக் மியூசிக்..
Enjoy ராஜாக்களா ;) 
(via Discovery News)


**



தெய்வத் திருமகன் படம் பற்றிய விமர்சனம் படித்து விட்டேன் (படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல ஆசை தான்!). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. கிரெடிட் ஏதும் போட்டார்களா? இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா? (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு!)

**
இரண்டு முக்கியமான (அட்லீஸ்ட் என்னக்கு அப்படி தோணிச்சு!) புத்தகங்கள் படித்து முடித்தேன்:


1. Pour Your Heart Into It: How Starbucks Built a Company One Cup at a Time
2. The Facebook Effect

பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுத வேண்டும். இப்பொழுது ஒரு சில விஷயங்கள்.

Howard Schultz தான் Starbucks பற்றிய புத்தகத்தை எழுதியவர். அவர் தான் Starbucks இன் CEO கூட! ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக! Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர்! ஒருவர் ஆங்கியல் ஆசிரியர் (Jerry Baldwin). ஒருவர் வரலாற்று ஆசிரியர் (Zev Seigl). ஒருவர் எழுத்தாளர் (Gordon Bowker). ஆனால் மூவருமே காஃபியின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள்! 

இவர்களோடு 1982ஆம் வருடம் ரீடைலைக் கவனித்துக்கொள்ள வந்தவர் தான் Schultz. மிலனுக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் அடித்தவுடன் அவரது மனம் துள்ளிக்குதிக்கிறது! மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான்  Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?! அப்புறம் Schultz Starbucksஐயே வாங்கியது வேறு கதை!

*

zuckerbergஐப் பற்றி நான் ஒன்றும் பெரியதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் புத்தகம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. இது படமாக வந்து விட்டது. Social Network.

அதாவது உலகம் முழுதும் மொத்தம் 400 பில்லியன் டாலர் வருமானம் ஆண்டொன்றுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கின்றன. இவை டீவி, பேப்பர், இன்டர்னெட் போன்ற எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. இதில் ஒரு சொற்பப் பகுதியே இன்டெர்னெட்டிலிருந்து கிடைக்கிறது. அதன் பெரும்பகுதி கூகிள் இன்று வரை எடுத்துக்கொண்டிருந்தது. AdSense மூலமாக. கூகிளின் மிகப்பெரிய பலவீனம்: செர்ச்.

விளம்பரத்துறையில் இது பலவீனம் தான். ஏனென்றால் விளம்பரம் மக்களுக்கு எப்படிக்கொடுக்கமுடியும்? அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே? ஆனால் நீங்கள் செர்ச் செய்ய வரும் முன்னரே 80 சதவிகிதம் உங்களுக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிந்து விடும். எடுத்துக்காட்டுக்கு: SAMSUNG LED TV. அதை வைத்துக்கொண்டு தான் அவர்களால் விளம்பரம் கொடுக்கமுடியும்.

ஆனால் 750 மில்லியன் நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் facebookக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் என்ன, பிறந்த ஊர் என்ன, நீங்கள் படித்த கல்லூரியின் பெயர் என்ன, உங்கள் அப்பா யார், அம்மா யார், உங்கள் பிறந்த தேதி என்ன, உங்கள் நண்பர்கள் யார், அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்ன புத்தகங்கள் படிப்பார்கள் போன்ற எல்லா விசயங்களும் தெரியும்!

இப்பொழுது சொல்லுங்கள் யார் அதிக வருவாய் ஈட்ட முடியும்?
இப்பொழுது தெரிகிறதா கூகிள் ஏன் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்கப் பாக்குதுன்னு?

ஆனா எனக்கென்னவோ டூ லேட்டுங்கிற மாதிரி படுது! Circleஐயும் Hangoutஐயும் கொண்டுவருவதற்கு facebook க்கு எவ்வளவ நேரம் ஆகப்போகுது?

*




சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/

>>

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
>>
மேலும் படிக்க ..


கல்வெட்டின் இந்த நக்கல் நன்றாக இருந்தது..
>>
சம்ச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் "அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும். அப்பத்தான் சமூகம் நன்னா இருக்கும்" என்று பேசும் மக்கள் (மக்குகள்) புத்தகத்தைப் படித்து இருப்பார்களா?
>>


;)